மாணவியை மதுகுடிக்க அழைத்த பேராசிரியர்கள்.

கல்லூரி மாணவியை மது குடிக்க அழைத்த பேராசிரியர்கள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை பாளையங்கோட்டையில் வரலாற்று சிறப்பு மிக்க கல்லூரி அமைந்துள்ளதுஅரசு உதவி பெறும் இந்த கல்லூரியில் பயிலும் மாணவிக்கு இரவில் செல்போனில் ஆபாசமாகப் பேசி, அவரை மது குடிக்க அழைத்த பேராசிரியர்கள் ஜெபாஸ்டியன், பால்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெபாஸ்டியனை போலீசார் கைது செய்த நிலையில் மற்றொரு பேராசிரியரை தேடி வருகின்றனர். இருவரும் கல்லூரியிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Tags : மாணவியை மதுகுடிக்க அழைத்த பேராசிரியர்கள்