பிரதமர் நரேந்திர மோடி-அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் உரையாடினர்.
பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை அன்று தொலைபேசியில் உரையாடினர். இந்த உரையாடல் மிகவும் அன்பானதாகவும் ஆக்கப்பூர்வமானதாகவும் இருந்ததாக பிரதமர் மோடி விவரித்தார். இந்தியா _அமெரிக்க உறவுகள் குறித்தும் விரிவான உலகளாவிய கூட்டான்மையின் முன்னேற்றம் குறித்தும் இரு தலைவர்களும் பரஸ்பரம் தம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இரு தரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் இத்தொலைபேசி உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. டெல்லியில் வர்த்தக பேச்சு வார்த்தைகள் நடந்து வந்த நிலையில் ,அமெரிக்க அதிபருடன் தொலைபேசி உரையாடல் நிகழ்ந்தது. இதன் மூலம் சர்வதேச அளவில் ஏற்படக்கூடிய முன்னேற்றங்கள் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டவர்கள் பொதுவான நலன்களை முன்னெடுக்கவும் நெருக்கமாக செயல்படவும் முடிவெடுத்துள்ளனர்.
Tags :











.jpeg)






