அனுபவம் வாய்ந்த கேட் கீப்பர்களை பணியில் அமர்த்த அதிரடி உத்தரவு

ரயில்வே துறையில் விபத்துகள் தொடர்வதால், அனுபவம் வாய்ந்த கேட் கீப்பர்களை பணியில் அமர்த்த வேண்டும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர், "எந்தவித தவறான குறிப்புகளும், பணியில் ஒழுங்கீனம் இல்லாத கேட் கீப்பர்களை, பணியில் அமர்த்தப்பட வேண்டும். கேட் கீப்பர்களுக்கு குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.
Tags :