திமுகவின் வரலாற்றுத் திரிபுக்கு ஒரு அளவே இல்லையா? - இபிஎஸ்

by Editor / 17-07-2025 03:01:41pm
திமுகவின் வரலாற்றுத் திரிபுக்கு ஒரு அளவே இல்லையா? - இபிஎஸ்

காமராஜரின் பெரும் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், திருச்சி சிவா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "காமராஜர் மறையும் தருவாயிலான நிகழ்வுகள் வரலாற்றுக் குறிப்பாக உள்ள போதே, அவர் கருணாநிதியின் கையைப் பிடித்துப் புகழ்ந்தார் என்பது எவ்வளவு பெரிய பச்சைப்பொய்? திமுகவின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா?" என்று பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via