பனிப்பொழிவு அதிகரிப்பால் சின்ன வெங்காய விவசாயம் பாதிப்பு

by Editor / 22-02-2025 09:36:06am
பனிப்பொழிவு அதிகரிப்பால் சின்ன வெங்காய விவசாயம் பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள சின்னக்கரட்டுபட்டி, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, அம்பிளிக்கை முத்துநாயக்கன்பட்டி. உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அதிக அளவில் சின்ன வெங்காயம் பயிர் செய்யப்பட்டு வருகிறது. கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் சின்ன வெங்காயம் நடவு செய்யும் விவசாயிகள் பங்குனி மாதங்களில் அறுவடை செய்வது வழக்கம். இந்த நிலையில் இப்பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான மூடுபனி நிலவுவதால் சின்ன வெங்காயப் பயிர் பூஞ்சான் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இந்த நோய்  தாக்குதலுக்கு உள்ளான சின்ன வெங்காய பயிர்கள் சிவப்பு நிறமாக மாறி கருகி வருகிறது. இதனால் சின்ன வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு சுமார் ஒரு லட்சம் வரை செலவு செய்து வரும் விவசாயிகள் உரிய விளைச்சல் கிடைக்காததால் வேதனை அடைந்து வருகின்றனர்.

 

Tags : பனிப்பொழிவு அதிகரிப்பால் சின்ன வெங்காய விவசாயம் பாதிப்பு

Share via