நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உயிரிழப்பு.

நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உடல்நலக்குறைவால் உயிரிழப்பு.56 வயதான கோயில் யானை காந்திமதிக்கு வயது முதிர்வு மற்றும் தூக்கமில்லாமல் கடந்த ஒருமாத காலமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்ப்டுகிறது.நேற்று படுத்தநிலையில் இருந்த காந்திமதியை 2 கிரேன் மூலமாக தூக்கி நிறுத்தி உற்சாகமூட்டியநிலையில் ஓரளவு சகஜ நிலைக்கு வந்ததாக்க கருதப்பட்ட நிலையில் உடல் நல குறைவால் இன்று 12-01-2025 காலை 7- 20 மணிக்கு காலமானது.கடந்த ஒரு மாத காலமாக தீவிர சிகிச்சை மருத்துவர் குழு மூலம் கொடுக்கப்பட்டு வந்தது. 1985ஆம் ஆண்டு நயினார் பிள்ளை என்பவரால் கோயிலுக்கு யானை நன்கொடையாக அளிக்கப்பட்டது.தென்காசி திருநெல்வேலி மாவட்ட ஆலயங்களில் சங்கரன்கோவிலில் மட்டுமே யானை உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உயிரிழப்பு.