சென்னை மெரினா கடற்கரை முதல் கலங்கரை விளக்கம் வரை, 3 தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள்.
காணும் பொங்கலை முன்னிட்டு ஜன.16ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரை முதல் கலங்கரை விளக்கம் வரை, 3 தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 200க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்கள், மீட்பு பணிக்கான படகுகள், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்படவுள்ளன. பெசன்ட் நகர் கடற்கரை, ஏலியட்ஸ் கடற்கரை, செம்மொழி பூங்கா, அரசு பொருட்காட்சி உள்ளிட்ட இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.
Tags : சென்னை மெரினா கடற்கரை முதல் கலங்கரை விளக்கம் வரை, 3 தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள்



















