டிராஃபிக் ரூல்ஸை மதிக்காத வாகன ஓட்டிகள் - ரூ.23 கோடி அபராதம்

by Staff / 17-10-2022 04:28:19pm
டிராஃபிக் ரூல்ஸை மதிக்காத வாகன ஓட்டிகள் - ரூ.23 கோடி அபராதம்

கடந்த மார்ச் 2018 ஆம் ஆண்டு முதல் பணமில்லா முறைக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை மாற்றப்பட்டது. கால் சென்டர் மூலம் ஏப்ரல் 11ம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை 6 மாதங்கள் அழைப்பு மையங்களில் இருந்து தொலைபேசி மூலம் விதிமுறைகளை மீறியவர்கள் அபராாதம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. கடந்த ஆறு மாதங்களில் மூன்று லட்சத்து 85 ஆயிரத்து 68 வழக்குகளுக்கு அபராதம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு 6 கோடியே ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 160 ரூபாய் அபராத தொகையாக , கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டும் செலுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கும் அபராதம் செலுத்துவதற்கான சிறப்பு அம்சம் தொடங்கப்பட்டதன் விளைவாக குடிபோதையில் வாகன ஓட்டுனர்களுக்கு தலா 10,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் 6,108 வழக்குகளில் சுமார் 6 கோடியே 7 லட்சத்து 66,000 அபராதமாக விதிமுறைகளுக்கு வழிசூலிக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களில் மட்டும் மொத்தமாக 9 லட்சத்து 18 ஆயிரத்து 573 வழக்குகளில் ரூபாய் 23 கோடியே 25 லட்சத்து 10 ஆயிரத்து 581 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via