டாஸ்மாக் கடை மூடப்பட்டதால், தெருவுக்கு அருள் எம்.எல்.ஏ. பெயரை சூட்டிய பொதுமக்கள்

by Editor / 22-11-2022 08:00:55am
டாஸ்மாக் கடை மூடப்பட்டதால், தெருவுக்கு அருள் எம்.எல்.ஏ. பெயரை சூட்டிய பொதுமக்கள்

சேலம் மாவட்டம், முத்துநாயக்கன்பட்டி பஸ் நிலையம் அருகே கடந்த 2017-ம் ஆண்டு முதல் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இந்த கடையால் இப்பகுதி பொது மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். இதையடுத்து அருள் எம்.எல்.ஏ.வின் பல கட்ட போராட்டத்தால் கடந்த 7-ந் தேதி, இந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதனால் முத்துநாயக்கன்பட்டி மட்டுமல்லாமல் அதனைச் சுற்றியுள்ள ஊராட்சிகளில் வாழும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவருக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.சுற்று வட்டார கிராம பொதுமக்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கட்சி பாகுபாடின்றி ஒன்றிணைந்து முத்துநாயக்கன்பட்டியில் பாராட்டு விழா நடத்தினர்.  பின்னர் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி செலுத்தும் விதமாக அங்காளம்மன் நகர் பகுதி பொதுமக்கள் தங்களது தெருவுக்கு இரா.அருள் தெரு என்று பெயர் பலகை வைத்து திறந்தனர்.

 

Tags :

Share via