சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்த உத்தரவு ரத்து

நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. நடிகர் பிரபு தாக்கல் செய்த மனு மீது உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், நடிகர் பிரபு தான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ரூ.9 கோடி கடன் தொடர்பான வழக்கில் சிவாஜி இல்லத்தை ஜப்தி செய்ய ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வில்லங்கப் பதிவில் நீதிமன்ற ஜப்தி உத்தரவை நீக்க பதிவுத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags :