போதையில் சாக்கடையில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுமேட்டூரை சேர்ந்தவர் பொம்முசாமி (வயது 53). இவர் கடந்த இரு நாட்களுக்கு முன்பு அந்தியூர் தவிட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்து விட்டு அங்கிருந்த ஒரு சாக்கடை அருகே இருந்த தடுப்புச்சுவரில் அமர்ந்து உள்ளார். மது போதையில் சாக்கடையில் தவறி விழுந்து விட்டார். இதனையடுத்து, இரண்டு நாட்களுக்கு பிறகு நேற்று மதியம் துர்நாற்றம் அடித்ததால் அப்பகுதியில் சென்றவர்கள் பார்த்தபோது இவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. சடலத்தை மீட்ட அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :