தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

by Admin / 15-01-2026 08:59:18am
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

 உலகத் தமிழர் அனைவருக்கும் தமிழ் பண்பாட்டு பெருநாள் பெருநாள்- உழவைப் போற்றும் அறுவடை திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துக்கள் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பச்சரிசி, சர்க்கரை ,தித்திக்கும் செங்கரும்பு, புதிய வேட்டி சேலை ,3 ஆயிரம் ரூபாய் என நமது திராவிட மாடல் அரசு வழங்கிய உங்கள் பரிசு தொகால் தமிழ் நாடகம் பொங்கலை மிகச் சிறப்பாக கொண்டாட மக்கள் தயாராகிவிட்டனர்.

நானும், இன்று சென்னை சங்கமம் கலைவிழா ,ஜனவரி 17 அன்று உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆர்வத்துடன் ஆயத்தமாகி உள்ளேன்.

அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம், கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி, தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள் என பல்வேறு தரப்பினர் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றும் என இந்த பொங்கல் அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கலாக அமைய வேண்டும் என மக்களின் மனம் அறிந்து நமது அரசு செயல்பட்டு வருகிறது தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்தின் ஒருவரையும் பின் தங்க விடமாட்டோம். அனைவரும் வெல்வோம் ஒன்றாக என நாள்தோறும் நலத்திட்டங்கள் தொடர்கின்றன.

 அடுத்த ஐந்து ஆண்டுகள் செய்ய வேண்டிய பணிகளுக்கும் இப்போதே தயாராகும் வகையில் தமிழ்நாட்டு மக்களிடம் உங்கள் கனவை சொல்லுங்க என அவர்களின் கோரிக்கைகள் ,தேவைகளை கேட்டறிந்து அவற்றை 2030க்குள் நிறைவேற்ற உறுதி கொண்டு உள்ளேன் கல்வி மருத்துவம் வேலை வாய்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ,அமைதி மத நல்லிணக்கம் சமத்துவம் என ஆரோக்கிய அரசியலை முன்னெடுக்கும் இந்த நல்லாட்சி திராவிட மாடன் 2.0 வடிவில் தொடர வேண்டும் என மக்களை நீங்களும் மனப்பூர்வமாக முடிவெடுத்து விட்டீர்கள். உங்கள் திரு விழாவிற்காக வெளியூர் சென்று திரும்பும் பாதுகாப்பாக பயணங்களை மேற்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

உழவர் பெருங்குடி மக்களை வணங்கி, புத்தாடை, வண்ணக்கோலம் ,உறவினர்களை சந்தித்து மகிழும் உற்சாகம், விளையாட்டுப் போட்டிகள் கலை நிகழ்ச்சிகள், கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் பண்பு ஆகியவற்றோடு தமிழ்நாடு புதுப்பாளையம் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சி பொங்கலாக அமைந்திட எடை என எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள். பொங்கலோ பொங்கல்.

 

Tags :

Share via

More stories