தமிழகத்தின் அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாய் வளர்ச்சி வரும் 3 சதவீதமாக பின் தங்கி உள்ளதாக -அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

by Admin / 02-11-2026 11:34:55pm
தமிழகத்தின் அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாய் வளர்ச்சி வரும் 3 சதவீதமாக பின் தங்கி உள்ளதாக -அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தம் எக்ஸ் வலைதள பக்கத்தில் தமிழகத்தின் அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாய் வளர்ச்சி வரும் 3 சதவீதமாக பின் தங்கி உள்ளதாகவும் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் அண்டை மாநிலமான ஆந்திராவிற்கு செல்வது மிகுந்த கவலை அளிக்கிறது என்றும் தேசிய சராசரி ஜிஎஸ்டி வளர்ச்சியை விடவும் அண்டை மாநிலங்களான கேரளா 23 சதவீதமும் ஆந்திரா 24 சதவீதம் கர்நாடகா 18% ஆகிய மாநிலங்களை விடவும் தமிழகத்தின் அக்டோபர் மாத ஜிஎஸ்டி வளர்ச்சி வெறும் மூணு சதவீதமாக மிகவும் குறைவாக இருக்கிறது என்றும் தமிழ்நாட்டில் நிராகரித்து விட்டு சுமார் 1614 கோடி மதிப்பிலான மூணு தென் கொரிய நிறுவனங்களின் தொழில் முதலீடுகள் ஆந்திரா மாநிலத்துக்கு சென்று விட்டதாகவும் நடிகர் விஜய் நடித்த திருமலை திரைப்படத்தில் வரும் பிரபல நகைச்சுவை கட்சியான டேக் டைவர்ஸ் என்பதைப் போல தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில்களை எல்லாம் தமிழக வெற்றிக்கழக அரசு ஆந்திராவிற்கு டேக் டைவர்ஷன் செய்து தாரை பார்த்து கொண்டு இருக்கிறது என்றும் மாநிலத்தின் சொந்த உற்பத்தி மூலமாக வரி வருவாய் குறைந்து வருவதாகவும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் பொருளாதாரத்தையும் பெருக்க தமிழக வெற்றிக்கழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo