ஆண்டு ராசி பலன்-2024

by Admin / 01-01-2024 01:53:47am
ஆண்டு ராசி பலன்-2024

மேஷ ராசி .
கனிவான பேச்சுக்களின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும்.

குழந்தைகளின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணைவர் வழியில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பயணம் தொடர்பான தொழில்களில் முன்னேற்றம் உண்டாகும். கடினமான விஷயங்களையும் எளிதாக புரிந்து கொள்வீர்கள்.

பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். தேவையற்ற மன பதற்றத்தை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

தூரத்து உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். நேரத்திற்கு உணவுகளை உட்கொள்வது நல்லது. பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தினருடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் உருவாகும். அடகில் இருந்துவந்த சில பொருட்களை மீட்பதற்கான எண்ணங்கள் மேம்படும்.
பெண்களுக்கு:
இழுபறியாக இருந்துவந்த பாகப்பிரிவினை பிரச்சனைகள் குறையும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். சிந்தனைகளில் தெளிவும், உற்சாகமும் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் தொடர்பான விரயங்கள் உண்டாகும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தினை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். குழந்தைகளுக்கு சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும்

ரிஷப ராசி .
மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் எல்லாம் விலகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அடிப்படையான சில வசதிகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். உடல் தோற்றப்பொலிவு அதிகரிக்கும். எதிர்பார்த்த வங்கி சார்ந்த உதவிகள் சாதகமாகும். கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்

. நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில செலவுகள் ஏற்பட்டாலும் அதற்கு உண்டான வரவுகளும் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். மனதளவில் இருந்துவந்த குழப்பங்களும், சில போராட்டங்களும் விலகும். தடைபட்ட சில பணிகள் சாதகமாக முடிவு பெறும்.

வீட்டை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களில் சில அலைச்சல்களுக்கு பின்பு சாதகமான முடிவு கிடைக்கும். அடகில் இருந்த பொருட்களை மீட்பதற்கான உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதிய அனுபவங்கள் ஏற்படும். உறவினர்கள் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும்.
பெண்களுக்கு:
புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று ஈடுபடவும். மனதில் ஒருவிதமான சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். தொலைதூர பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். ஆடம்பரமான செலவுகளை குறைத்துக் கொள்ளவும். குடும்ப பெரியவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். புதிய மனை மற்றும் வீடு வாங்குவதில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும்

.மிதுன ராசி
மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். தனவரவு தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் இருந்த மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும்.

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமையும், புரிதலும் மேம்படும். இறை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். விவசாய பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். உடல் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.

கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சுபகாரியத்தில் இருந்துவந்த தடைகள் விலகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. வழக்கு தொடர்பான சில விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும்.
பெண்களுக்கு:

பெண்கள் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களை நம்பாமல் தீர விசாரித்து முடிவெடுக்கவும். உடன் இருப்பவர்களிடம் தனிப்பட்ட விஷயங்களை பகிராமல் இருக்கவும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்லவும். ஆடம்பர பொருட்கள் மற்றும் சிற்றின்ப செயல்பாடுகளால் சேமிப்புகள் குறையும்.
 
கடக ராசி .
நீண்ட நாட்களாக எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். தடுமாற்றமான பேச்சுக்கள் குறையும். மனதில் புதிய நம்பிக்கை உண்டாகும். இழுபறியான வரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நேரம் கடந்து உணவு உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்த்துக் கொள்ளவும்.

வெளிவட்டாரத்தில் அலைச்சல்கள் உண்டாகும். உணர்ச்சிவசமான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். உடன் இருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். புதிய வகை உணவுகளில் கவனம் வேண்டும். அவ்வப்போது தலைவலி சார்ந்த பிரச்சனைகள் தோன்றி மறையும். குழந்தைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.

பார்வை தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். இன்ப சுற்றுலா செல்வதற்கான சூழ்நிலைகள் அமையும். புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். கொடுக்கல், வாங்கலை குறித்து வைத்துக் கொள்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் ஏற்படும்.
பெண்களுக்கு:

பெண்கள் குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் கையிருப்புகள் குறையும். உடன் பிறந்தவர்களை பற்றிய புதிய கண்ணோட்டம் ஏற்படும். உறவினர்கள் வழியில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். பழைய கடன் சார்ந்த பிரச்சனைகளை குறைப்பீர்கள். இழுபறியான வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்
. சிம்ம ராசி.
மனதில் நினைத்த காரியங்கள் எதிர்பார்த்த விதத்தில் நடைபெறும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். எதையும் சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும், தைரியமும் பிறக்கும். ஒப்பந்தம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். செயல்பாடுகளில் இருந்த தடை, தாமதங்கள் விலகும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். குடும்பத்தை விட்டு விலகி இருந்தவர்கள் திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.

தொலைதூர பயணங்களை மேற்கொள்வீர்கள். விவசாய பணிகளில் லாபம் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதில் இருந்த தடைகள் விலகும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். தந்தை வழியில் மறைமுகமான ஆதாயம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகளின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். திடீர் தனவரவுகள் உண்டாகும். வெளிநாட்டு குடியுரிமைகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். உடல் தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். புதுவிதமான துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும்.
பெண்களுக்கு:

திருமணமான பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் ஆதரவுகள் மேம்படும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். எதிர்பாராத சில திடீர் அதிர்ஷ்டங்களின் மூலம் மன மகிழ்ச்சி அடைவீர்கள். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும்.
 கன்னி ராசி .
வாகன வசதிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். வழக்கு தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும். உங்கள் கருத்துக்களுக்கான மதிப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படுவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்புகள் மேம்படும். தனவருவாயில் இருந்துவந்த நெருக்கடிகள் விலகும். திட்டமிட்ட பணிகள் நிறைவுபெறுவதில் விடாமுயற்சி வேண்டும்.

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் பெருகும். பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது புரிதலை உருவாக்கும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். மனதில் தோன்றும் கருத்துக்களை வெளிப்படுத்தும் வல்லமை அதிகரிக்கும்.

பண விஷயத்தில் முன் ஜாமீன் கொடுப்பதையும், வாக்குறுதி அளிப்பதையும் தவிர்க்கவும். அரசு வகையில் எதிர்பார்க்கும் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சிலருக்கு வீடு மாற்றம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். காப்பீடு சார்ந்த துறைகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். விவசாய பணிகளில் உழைப்புகள் அதிகரிக்கும்.
பெண்களுக்கு:

பெண்களுக்கு தொழில் நிமிர்த்தமான மற்றும் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். சுபகாரியத்தில் இருந்துவந்த தடைகள் விலகும். உறவினர்கள் வழியில் ஒற்றுமையும், ஆதரவும் உண்டாகும். வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் குறையும். குழந்தைகளிடம் கோபத்தை வெளிப்படுத்தாமல் கனிவுடன் செயல்படவும். ஆடம்பர பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.

துலாம் ராசி.
எதிலும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையுடன் செயல்பட்டால் முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.

சொத்து பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சாதுரியமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றி கொள்வீர்கள். சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம் மேம்படும். மூத்த சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்த கணவன், மனைவி ஒன்றிணைவதற்கான சூழ்நிலை உண்டாகும். இணையம் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். உயர் பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கும். ஆன்மிக பணிகளை முன் நின்று செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
பெண்களுக்கு:

பெண்களுக்கு மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புத்திர பாக்கியம் அமையும். வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் மறையும். வீடு, மனை மற்றும் வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். எதையும் சமாளிக்கும் தைரியம் பிறக்கும். மனதிற்கு நெருக்கமானவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும். மூத்த சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தீராத சில பிரச்சனைகள் விரைவில் தீரும்
.விருச்சிக ராசி 
குடும்ப உறுப்பினர்களிடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உறவினர்களிடத்தில் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பங்காளி வழி உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

கடன் தொடர்பான பிரச்சனைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மனதளவில் மாற்றங்கள் ஏற்படும். தவறிய சில பொருட்கள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும்.

தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். கருத்துக்கள் கூறுவதில் கவனம் வேண்டும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதன் மூலம் சேமிப்புகளை அதிகப்படுத்த இயலும்.
பெண்களுக்கு:

பலதரப்பட்ட சிந்தனைகளினால் ஆசையும், சஞ்சலமும் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே விவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. மற்றவர்களை சார்ந்து முடிவெடுக்காமல் தனிப்பட்ட முறையில் தீர விசாரித்து முடிவு எடுக்கவும். புதிய துறை சார்ந்த தேடல் ஏற்படும். வயிறு தொடர்பான பிரச்சனைகள் குறையும். பெற்றோரிடம் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் வெளியில் மதிப்பு அதிகரிக்கும்.
தனுசு ராசி 
குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை அறிந்து கொள்வீர்கள். புத்திக்கூர்மையான செயல்பாடுகளின் மூலம் மேன்மை அடைவீர்கள். சிறு சிறு வதந்திகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும்.

சிலருக்கு வீடு மற்றும் உத்தியோக பணிமாற்றம் கைகூடி வரும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்ப பெரியோர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். எதிர்பார்த்து இருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். அரசு தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு வெகுமதியும், பாராட்டும் கிடைக்கும்.

பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். முகத்தில் புத்துணர்ச்சியும், வசீகரமும் அதிகரிக்கும். திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். புதிய துறை நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். உடன் பணிபுரிபவர்களால் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும்.
பெண்களுக்கு:

பெண்கள் கணவரிடத்தில் மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். ஆன்மிக பயணங்கள் குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். பேச்சுக்களில் இருந்த தடுமாற்றங்கள் குறையும். புதிய காதணி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்

.மகர ராசி .
உறவினர்களை பற்றிய புதிய கண்ணோட்டம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட வழிமுறைகளின் மூலம் வெற்றிகளை உருவாக்கிக் கொள்வீர்கள். வழக்குகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். மனதளவில் சகிப்புத்தன்மை அதிகரிக்கும்.

குடும்ப பெரியோர்களிடம் நல்லுறவை வளர்த்துக் கொள்வது நல்லது. பூர்வீக சொத்துக்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். மனதளவில் இருந்துவந்த தயக்கம் மற்றும் தன்னம்பிக்கை இன்மை நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

கடன்களை அடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் எண்ணங்களை அறிந்து அதற்கு தகுந்த விகிதத்தில் யூகங்களை அமைப்பீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படும். செய்தொழிலில் புதிய அனுபவங்கள் ஏற்படும். கற்பனை சார்ந்து துறைகளில் ஈடுபாடு உண்டாகும்.

 கும்ப ராசி.
விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். நேர்மறையான சிந்தனைகளின் மூலம் வெற்றி வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகளும், ஆசீர்வாதங்களும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதில் இருந்துவந்த தயக்கங்கள் படிப்படியாக குறையும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சிறு மற்றும் குறுந்தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள்.

புதிய தொழில்நுட்பங்களை சரியான முறையில் பயன்படுத்தி புதுமையான அத்தியாயத்தை உருவாக்குவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வீடு மற்றும் வாகனம் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தந்தைவழி உறவினர்களை பற்றிய புரிதல் மேம்படும்

 மீன ராசி 
உங்கள் பேச்சுக்களுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் சுமுகமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத புதிய பொறுப்புகளின் மூலம் பிரபலம் அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் ஆதாயமான பலன்கள் கிடைக்கும். சிறு சிறு வதந்திகளின் மூலம் மனச்சோர்வு ஏற்பட்டு நீங்கும்.

உடல் ஆரோக்கியம் மேம்படும். வெளியூருக்கு சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.

தகவல் தொடர்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளிப்படையான பேச்சுக்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். மறைமுகமான சில தடைகளின் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் வழியில் அலைச்சலும், ஆதாயமும் உண்டாகும். மனதளவில் எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை மேம்படும்.

 

Tags :

Share via