கேரளாவின் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

கேரளாவின் 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் நாளை (சனிக்கிழமை) கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்துள்ளது. அதே போல் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழகத்தின் கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
Tags :