புதுப்பெண் தற்கொலை வழக்கு.. ஜூலை 7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே புதுப்பெண் ரிதன்யா தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் அப்பெண்ணின் கணவர் கவின்குமார் மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி கைதாகினர். அவர்கள் ஜாமின் கோரிய மனுவுக்கு எதிராக ரிதன்யாவின் பெற்றோர் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர். இதன் மீதான விசாரணை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 4) நடைபெற்றது. விசாரணையில், கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கேட்டதால், விசாரணை வரும் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Tags :