மதுரையில் பெய்த கனமழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்காப்பாற்றிய காவல்துறையினர்.

by Editor / 13-10-2024 08:23:09am
மதுரையில் பெய்த கனமழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்காப்பாற்றிய காவல்துறையினர்.

மதுரையில் மூன்று மணி நேரத்திற்கு பெய்த கன மழையால் வெள்ள நீரில் மூழ்கிய ரயில்வே தரைப்பாலங்கள்,,மாவட்டம் முழுவதிலும் 3 மணி நேரத்திற்கு மேலாக  இடி மின்னலுடன்  கூடிய கனமழை தொடர்ச்சியாக பெய்தது.

மதுரை ரயில் நிலையம் , ஆரப்பாளையம் அண்ணாநகர் , சிம்மக்கல் , மாட்டுத்தாவணி திருப்பரங்குன்றம் , ஆனையூர், கோரிப்பாளையம் பழங்காநத்தம் , பைபாஸ் சாலை , அவனியாபுரம் வில்லாபுரம் , விமான நிலையம் , திருநகர் உள்ளிட்ட மாநகர் பகுதிகளில் அதிக அளவில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓட தொடங்கியது 

இதில் மதுரை மணி நகரம் ஒர்க் ஷாப் ரோடு சாலை பகுதியில் அமைந்துள்ள ரயில்வே தரைப்பாலத்தில் மழை நீரானது 5 அடி உயரத்திற்கு மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியதால் பாலத்தை கடக்க சென்ற காவல்துறை வாகனம் வெள்ளத்தில் சிக்கியது. 

இதனையடுத்து காவல்துறை வாகனத்தில் இருந்த காவல்துறையினர் நீரில் நீந்தி தப்பினர்.இதனைத் தொடர்ந்து பின்னால் வந்த மற்றொரு காரில் 3 பேருடன் வந்த கார்  மழை வெள்ளத்தில் சிக்கிய நிலையில் அங்கு மிதந்துவந்த காவல் துறையினர் கடும் சிரமத்துடன் காரில் இருந்த மூவரையும்  பத்திரமாக மீட்டு அழைத்து வந்தனர் 

இதேபோன்று பாலத்தின் வழியே கடக்க சென்ற பைக்குகள், ஆட்டோக்கள், சரக்குவாகனங்கள் என  பல்வேறு வாகனங்களும் வெள்ள நீரில் சிக்கி உள்ளதால் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டுள்ளதா என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர் 

இதுபோன்ற கனமழை பெய்யும்போது தரைப்பாலங்களில் போக்குவரத்தை தடை செய்ய உடனடியாக தடுப்புகள் அமைத்து மாநகராட்சி அல்லது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு இருந்தால் இதுபோன்ற இழப்புகளை தடுத்திருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர் 

மதுரை மாநகரின் மையப் பகுதியில் இரவு நேரத்தில் நேரத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில்  வாகனங்கள் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

தொடர்ச்சியாக வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்த போது அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் தொடர்ந்து வாகன ஓட்டுனரை எச்சரித்த நிலையிலும் அதனை கண்டு கொள்ளாமல் வெள்ள நீருக்குள் சென்றதால் கார் முழுவதிலும் நீரில் மூழ்கியது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மதுரை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மதுரை தத்தனேரி மற்றும் பழங்காநத்தம் திருப்பரங்குன்றம் கருடன் தரைப்பாலும் உள்ளிட்ட ரயில்வே தரைப்பாலங்கள் முழுவதிலும் நீரில் மூழ்கியது.

 

Tags : மதுரையில் பெய்த கனமழையில் மணிநகரம் ரயில்வே தரைப்பாலத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரில் சிக்கிய நபர்களை மீட்டு உயிரை காப்பாற்றிய காவல்துறையினர்

Share via