கள்ளக்காதலுக்கு இடையூறு கணவனை கொலை செய்ய உடந்தையாக இருந்த மனைவி கைது

by Editor / 11-06-2022 08:12:44am
கள்ளக்காதலுக்கு இடையூறு  கணவனை கொலை செய்ய உடந்தையாக இருந்த  மனைவி கைது

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள பேரூரணி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமிஇவா் வெளி மாநிலங்களுக்கு சென்று வரும் லாரியில் டிரைவராக வேலை பாா்த்தது வந்தாா். இவருக்கு திருமணமாகி கனகலெட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மதுவுக்கு அடிமையான கருப்பசாமி மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளாா். லாரியில் வெளிமாநில வேலைக்கு சென்றுவிட்டு பின் 3 மாதங்களுக்கு பின்னர் கடந்த 7ம்தேதி கருப்பசாமி வீட்டுக்கு வந்துள்ளார். அன்று குடும்பத்தினருடன் கருப்பசாமி இரவில் உணவருந்தி விட்டு வீட்டின் வெளியே படுத்து தூங்கியுள்ளாா். மறுநாள் காலை பார்த்த பொழுது வீட்டின் முன்பே கருப்பசாமி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியபோது, கருப்பசாமியின் மனைவி கனகலட்சுமி மீது சந்தேகம் எழுந்துள்ளது. அவரது செல்போனுக்கு ஒரு நம்பரிலிருந்து அடிக்கடி அழைப்பு வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் கனகலட்சுமியிடம் தொடா்ந்த கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில் கணவர் கருப்பசாமி அடிக்கடி குடித்துவிட்டு தன்னிடம் தகராறு செய்து வந்தார். கடந்த ஓராண்டுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு கடம்பூர் மகளிர் காவல் நிலையம் வரை சென்றது. அப்போது கனகலட்சுமியின் உறவினர் சோழபுரத்தை சேர்ந்த டிரைவர் ரவிச்சந்திரன் என்பவர் கனகலட்சுமிக்கு ஆதரவாக உதவி செய்தாா். பின்னர் இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்துள்ளனர்.

நாளடைவில் அவர்கள் பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இந்த நிலையில் கடந்த 7ம் தேதி வீட்டிற்கு வந்த கருப்பசாமி வீட்டின் வெளியே தூங்கும் தகவலை அவரது மனைவி கனகலட்சுமி ரவிச்சந்திரனுக்கு செல்போனில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அன்று இரவே பேரூரணிக்கு வந்த ரவிச்சந்திரன் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த கருப்பசாமியின் கழுத்தை அறுத்தும், நெஞ்சில் குத்தியும் கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து ரவிச்சந்திரனை கைது செய்த போலீசாா் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கருப்பசாமியின் மனைவி கனகலட்சுமியையும் கைது செய்தனர்.

 

Tags : Wife arrested for conspiracy to murder husband

Share via