கவரைப்பேட்டையில் ரயில் சேவை தொடங்கியது.

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பிகார் மாநிலம் தர்பங்காவிற்கு ‘பாக்மதி எஸ்பிரஸ்’ என்ற பயணிகள் ரயில் (ரயில் எண் : 12578) இயக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் வழக்கம் போல் பெரம்பூரில் இருந்து நேற்று (11.10.2024) இரவு 07.44 மணியளவில் புறப்பட்ட இந்த ரயில், 08.27 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்புறத்தில் இந்த ரயில் வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பயணிகள் ரயிலின் முதல் 7 பெட்டிகள் தடம் புரண்டது. அதோடு ரயிலின் ஒரு பெட்டியில் தீ விபத்தும் ஏற்பட்டது. சரக்கு இரயிலின் 3 பெட்டிகள் சேதமடைந்தது. பயணிகள் ரயிலில் பயணம் செய்த 19 பேர் காயமடைந்தனர்.இந்தவிபத்து காரணமாக 18 ரயில்கள் ரத்து செய்யப்பட நிலையில் நேற்று இரவுமுதல் ரயில் விபத்து நடந்த கவரைப்பேட்டையில் சென்னை மார்க்கத்தில் ரயில் சேவை தொடங்கியது.ரயில் விபத்து நடந்த இடத்தில் சீரமைப்புப் பணிகள் முடிந்து ரயில் சேவை தொடங்கியுள்ளது.இன்று மீதி பணிகள் நிறைவடையும் என்றும் அதன் பின்னர் முழுமையான போக்குவரத்து தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags : கவரைப்பேட்டையில் ரயில் சேவை தொடங்கியது.