பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ, தலையாரி கைது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே என்.மங்கலம் பகுதியைச் சேர்ந்த டெய்லர் நாகராஜன் (49) தனது கிராமத்தில கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 2 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். இந்த நிலங்களுக்ககு பட்ட உட்ப்பிரிவு மாறுதல் கோரி இணையதளத்தில் விண்ணபித்துள்ளார். இது தொடர்பான அனுமதிக்காக ஓரியூர் விஏஒ மாதவனை, டெய்லர் நாகராஜன் அணுகியுள்ளார். ஆனால், பட்டா மாறுதலுக்கு பரிந்துரை செய்ய கிராம உதவியாளர் காளீஸ்வரன் கிராம நிர்வாக அலுவலர் மாதவன் ஆகிய இருவரும் நாகராஜனிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். இதனையடுத்து பேரம் பேசிய அவர்கள், ரூ.5 ஆயிரம் குறைத்துக் கொண்டு ரூ.20 ஆயிரம் கேட்டுள்ளனர். இது தொடர்பாக நாகராஜன் புகாரின் பேரில் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், விஏஓ மாதவன், கிராம உதவியாளர் காளீஸ்வரன் ஆகியோர் நாகராஜனை நேற்று மாலை மீண்டும் தொடர்பு கொண்டு லஞ்சமாக பேசிய தொகை குறித்து கேட்டுள்ளனர். இதனையடுத்து ரசாயன பவுடர் தடவிய ரூ.20 ஆயிரத்தை நாகராஜனிடம் இருந்து மாதவன் (31), காளீஸ்வரன் (34) வாங்கியபோது இருவரையும் ஊழல் தடுப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
Tags :



















