வாலிபரிடம் செல்போன்கள் பறிப்பு
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சைத்தான் கவுடு (வயது 18), ஜெகநாதன் மர்கீ (25). நண்பர்களான இவர்கள் நேற்று முன்தினம் ஸ்டேட் வங்கி காலனியில் நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மோட் டார் சைக்கிளில் 3 பேர். சைத்தான் கவுடு அருகே வந் தவுடன் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு இறங்கி னர். பின்னர் சைத்தான் கவுடு வைத்திருந்த 2 செல் போன்களை பறித்தனர். சைத்தான் கவுடு செல்போனை பிடுங்க விடாமல் தடுத்த போது, அவரை தள்ளி விட்டு வேகமாக மோட்டார் சைக்கிளில் செல்போன்களுடன் தப்பிச்சென்று விட்டனர். இதில் அவருக்கு உடலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரு கிறார். மேலும் சம்பவம் குறித்து அவர் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :



















