ஆலங்குளத்தில் முன்விரோதம் காரணமாக வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கிடார குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (23), கொலை வழக்கு ஒன்றில் வாய்தாவுக்காக தென்காசி நீதிமன்றத்திற்கு சென்று ஊர் திரும்பினார். கிடார குளம் கால்வாய் அருகே பைக்கில் சென்ற போது அடையாளம் தெரியாத நபர் வழிமறித்துள்ளார். பைக்கில் இருந்து இறங்கி அருகிலுள்ள கடை ஒன்றில் தஞ்சம் புகுந்த போது உள்ளே புகுந்த நபர் அவரை சரமாரியாக வெட்டியதில் மணிகண்டன் நிகழ்விடத்திலேயே பலி. தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் மற்றும் ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வந்த சூழலில் மூன்று நபர்கள் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் சரணடைய சென்ற பொழுது டிஎஸ்பி பிரதாபன் தலைமையிலான தனிப்படை போலீசார் மூன்று நபர்களை கைது செய்தனர்
Tags :



















