ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை

by Staff / 03-07-2023 01:25:29pm
ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் தக்காளி விலை கிலோ 100 ரூபாயை தாண்டி விற்கப்படுகிறது. வரத்து குறைவு, விளைச்சல் பாதிப்பால் விலை ஏற்றம் கண்டு சாமானிய மக்களை பெரிதும் பாதித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் இது தொடர்பாக ஆலோசனை நடத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், நாளை முதல் சென்னையில் 85 நியாயவிலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளார். மேலும், பல்வேறு மாவட்டங்களில் உள்ள நியாயவிலைக்கடைகள் மூலமாகவும் தக்காளி விற்கப்படும். விலை கட்டுக்குள் கொண்டுவரப்படும் என அறிவித்துள்ளார். ஒரு கிலோ ரூ.50 முதல் 65-க்கு விற்கப்படும்.
 

Tags :

Share via