by Staff /
03-07-2023
01:14:30pm
மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் ஜூலை 2 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. ரேவா நகரைச் சேர்ந்த சுமித்ரி என்பவர் உயிரிழந்தார். சுமித்ரியை கணவர் பாரத் மிஸ்ரா கொன்றதாக அவரது சகோதரர் போலீசில் அளித்த புகாரின் பேரில் சுமித்ரியின் உடலை போலீசார் மீட்டனர். மஞ்சள் காமாலையால் மனைவி இறந்ததாகவும், இறுதிச் சடங்கிற்காக தனது மகன் மும்பையில் இருந்து வர வேண்டியிருந்ததால் உடலை ஃப்ரீசரில் வைக்க முடிவு செய்ததாகவும் பாரத் மிஸ்ரா கூறியுள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :
Share via