இன்று கனமழைக்கு வாய்ப்பு
நெல்லை மாவட்ட மலைப்பகுதி, கன்னியாகுமரியில் இன்று கனமழை பெய்யக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று முதல் வருகிற 7ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதியில் உறை பனிக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல், மன்னார் வளைகுடா ஆகிய கடல் பகுதிகளில் 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.
Tags :