வந்தே பாரத் கட்டணங்கள் குறைக்கப்படும் - சோமண்ணா
வந்தே பாரத் கட்டணங்கள் குறைக்கப்படும் என மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா கூரியுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சோமண்ணா, "வந்தே பாரத் ரெயிலில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயணம் செய்யும் வகையில் அதன் டிக்கெட் கட்டணத்தை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக பிரதமர் மோடியுடன் நேற்று ஆலோசித்தோம். ரெயில்வே துறையின் செயல்பாடும் ராணுவம் போன்றது. நாட்டில் ராணுவம் முதலிடத்திலும், ரெயில்வே துறை 2-வது இடத்திலும் உள்ளது. அதற்கேற்ப 2 துறைகளின் செயல்பாடுகளும் இருக்கும்" என்று அவர் கூறினார்.
Tags :