கர்ப்பிணி ஊழியருக்கு விஷம் கொடுத்த சக ஊழியர்

by Staff / 02-04-2024 01:02:15pm
கர்ப்பிணி ஊழியருக்கு விஷம் கொடுத்த சக ஊழியர்

மத்திய சீனாவின் ஹுபே மாகாணத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் பணியாற்றும் கர்ப்பிணி பெண் ஊழியருக்கு, சக பெண் ஊழியர் ஒருவர் விஷம் கொடுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது. கர்ப்பிணிக்கு உடன் பணியாற்றும் சக பெண் ஊழியர் குடிநீரில் சந்தேகத்திற்கிடமான பொருளை கலந்து கொடுத்துள்ளார். இவை அனைத்தும் மேசைக்கு அருகில் இருந்த கேமராவில் பதிவாகியிருந்தது. இது தொடர்பாக கர்ப்பிணி பெண் போலீசுக்கு தகவல் கொடுத்தார். கர்ப்பமாக இருக்கும் தனது சக ஊழியர் மகப்பேறு விடுப்பில் சென்றால், முழு பணிச்சுமையும் தன் மீது விழும் என்பதால் இவ்வாறு செய்ததாக குற்றவாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

Tags :

Share via