தி.மு.க எம்.பி களுடன் தமிழக முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு .க. ஸ்டாலின்..
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக எம்பி களுடன் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் தலைமையில் முக்கிய கூட்டம் நடந்தேறியது. இக்கூட்டத்தில் , வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எழுப்பப்பட வேண்டிய பிரச்சனைகளை இறுதி செய்வதற்காக இக்கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன்படி, கோவை மற்றும் மதுரையில் முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களை மறுபரிசீலனை செய்து ஒப்புதல் அளிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்கிற தீர்மானத்தோடு மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுவதையும் உணர்த்த வேண்டும் என்பதாகவும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க நெல் கொள்முதலுக்கான ஈரப்பத வரம்பை 17 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்ப வேண்டும் என்றும் மகாத்மா காந்திஜி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் மற்றும் செம கிராசிக்ஷா திட்டம் உள்ளிட்ட தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள நிதியை விறுவிறுப்பது தொடர்பான பிரச்சனைகளையும் எழுப்ப வேண்டும் என்பதாகவும் மாநில சட்டமன்றதால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர்கள் நிறைவேற்ற ஒரு குறிப்பிட்ட காலக்கெடு தேவை மற்றும் சர்சைக்குரிய எல்லை நிர்ணய பிரச்சனை ஆகியவை எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சனைகளாக பேசப்பட்டது தமிழக மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது மற்றும் பிற நாடுகளால் அவர்களின் படகுகள் ஏலம் விடப்படுவது உள்ளிட்ட அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டியதன் அவசியத்தையும் இக் இக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. இக்கூட்டம் நிறைவுற்ற பின்பு திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி மற்றும் செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் உள்ளிட்ட தலைவர்கள் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் நாடாளுமன்றத்தில் மாநில உரிமைக்காக போராடுவதற்கான கட்சியின் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டையும் தெரிவித்தனர்.
Tags :



















