பிரதமர் மோடி அறுபதாவது அகில இந்திய காவல்துறை இயக்குனர்கள் மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் மாநாட்டில் ...
இன்று ராய்ப்பூர் சத்தீஸ்கர் ,பிரதமர் மோடி அறுபதாவது அகில இந்திய காவல்துறை இயக்குனர்கள் மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாடு நயாராய்பூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் கோவன் உள்துறை இணை அமைச்சர்கள் அனைத்து மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களின் டிஜிபிகள் மற்றும் மத்திய காவல் அமைப்புகளின் தலைவர்கள் மூன்று நாள் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். இம்மாநாட்டில் நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமர்வுகள் நடைபெற்றன இன்றும் நடை பெற்றுக் கொண்டிருக்கின்ற நிகழ்வில் பிரதமர் தலைமையில் நடந்து வருகிறது. நாளையும் இதற்கு தலைமை தாங்குகிறார். பிக் ஷீட் பாரத் பாதுகாப்பு பரிமாணங்கள் என்ற கருப்பொருள் முக்கியமான உள்நாட்டு பாதுகாப்பு சவால்கள் குறித்து இந்த அமர்வுகளில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் இடதுசாரி தீவிரவாதம் சைபர் குற்றங்களும் காவல்துறையில் ஏஐ பயன்பாடும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தீவிரமாக்கள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் எல்லை மேலாண்மை புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துதல் பற்றிய விவாதங்கள் முக்கிய கருப்பொருளாகும். இந்நிகழ்வில் சிறப்பான சேவைக்காக ஜனாதிபதியின் காவல் பதக்கங்களையும் பிரதமர் வழங்க உள்ளார்.
Tags :



















