பெண் வென்டிலேட்டர் கருவி செயலிழந்து உயிரிழப்பு உறவினர்கள் குற்றசாட்டு.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்திற்குட்பட்ட சிவனாகரம் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மனைவி அமராவதி. வயது 48.இவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நுரையீரல் பிரச்சனை காரணமாக கடந்த சனிக்கிழமை அதிகாலை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து மின்தடை ஏற்பட்ட காரணத்தினால் தான் அமராவதி உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் குற்றம் சாட்டி மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர்.மேலும் அந்த சமயத்தில் எடுத்த வீடியோ சமூக வலை தளங்களில் பதிவிடப்பட்டு வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து மருத்துவ கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ் கூறுகையில் அமராவதிக்கு காச நோய் காரணமாக நுரையீரல் முற்றிலும் பாதிக்கப்பட்டு மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலை தங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மின்தடை ஏற்பட்டு ஏழு நிமிடத்தில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் கொடுக்கப்பட்டதாகவும் தீவிர சிகிச்சை பிரிவில் அமராவதியுடன் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் வைக்கப்பட்ட நான்கு நபர்கள் நலமுடன் இருப்பதாகவும் இவர் மட்டுமே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Tags : பெண் வென்டிலேட்டர் கருவி செயலிழந்து உயிரிழப்பு உறவினர்கள் குற்றசாட்டு.