ராமேஸ்வரம் தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு திருவாரூரில் பாஜகவினர் மலர் தூவி உற்சாக வரவேற்பு.
தமிழகத்திற்கு இன்று வருகை தந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் புதிதாக கட்டப்பட்ட செங்குத்து தூக்கு பாலத்தை திறந்து வைத்து ராமேஸ்வரம் தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையையும் கொடியசைக்கு துவக்கி வைத்தார்.இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து திருவாரூர் வழியாக தாம்பரம் செல்வதற்காக இரவு ஒன்பது முப்பது மணிக்கு வந்த இந்த ரயிலுக்கு திருவாரூர் மாவட்ட பாஜகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.
குறிப்பாக ராமேஸ்வரத்திலிருந்து தாம்பரம் வரை செல்லும் இந்த ரயிலில் பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் 500 பயணிகளும் திருத்துறைப்பூண்டியில் இருந்து சுமார் 250 பயணிகளும் திருவாரூரில் இருந்து 100க்கும் மேற்பட்ட பயணிகளும் பயணிக்கின்றனர். இந்த ரயில் திருவாரூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தவுடன் பாஜகவினர் கட்சி கொடியுடன் மலர் தூவி இந்த ரயிலை வரவேற்றனர்.
மேலும் பாரத் மாதா கி ஜே என்கிற முழக்கங்களை எழுப்பியும் பொது மக்களுக்கும் பயணிகளுக்கும் இனிப்புகளை வழங்கியும் இந்த ரயிலை பாஜகவினர் வரவேற்றனர். மேலும் ரயிலுக்கு முன் நின்று கொடிகளை அசைத்தும் கட்சித் துண்டை அசைத்தும் ரயிலை வழியனுப்பி வைத்தது பன் ரயில் திருவாரூர் ரயில் நிலையத்தை கடந்த உடன் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இதில் பாஜக மாவட்ட துணைத் தலைவர் சங்கர் நகர தலைவர் கணேசன் உள்ளிட்ட பாஜக மகளிரணி மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags : ராமேஸ்வரம் தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு திருவாரூரில் பாஜகவினர் மலர் தூவி உற்சாக வரவேற்பு



















