பிரதமர் மோடி பாம்பன் பாலத்தை திறந்து வைதாா்.

by Admin / 06-04-2025 11:38:09pm
பிரதமர் மோடி பாம்பன் பாலத்தை திறந்து வைதாா்.

பிரதமர் மோடிபுதிய பாம்பன் பாலத்தை திறந்து வைப்பதற்காக ஹெலிகாப்டர் இருந்து மண்டபம் வந்தடைந்தார். அவரை ஆளுநர் ஆர் எம் ரவி ,தமிழகநிதிஅமைச்சர் தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன் ,மத்திய  அமைச்சர் அஸ்வினிவைசனவ்மத்திய இணை அமைச்சர் எல்..முருகன்,ஜி கே வாசன், பாஜக தலைவர் அண்ணாமலை ,வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ,சுதாகர் ரெட்டி, நவாஸ் கனி எம்பி, எச் ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், சரத்குமார்  உள்ளிட்டோர் வரவேற்றனர். பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பட்டு வேட்டி சட்டையோடு மேடைக்கு வந்திருந்தா.ர் இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம்- தாம்பரம் ரயில் போக்குவரத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.பின்னா் ராமேஸ்வர கோவிலுக்கு சென்று சுவாமிதாிசனம் செய்த பிறகு ரோடுஷோமூலம் பொதுமக்களைச்சந்தித்தாா்.

 

Tags :

Share via