by Staff /
12-07-2023
12:41:41pm
தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிநீக்கங்கள் இன்னும் தொடர்கின்றன. இரண்டாவது முறையாக நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி மைக்ரோசாப்ட் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இப்போது வாடிக்கையாளர் சேவை, சர்வீஸ் மற்றும் விற்பனை துறைகளில் உள்ள ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், மைக்ரோசாப்ட் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்தது. தற்போது, அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியில் 276 ஊழியர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் டிஸ்மிஸ் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
<br />
Tags :
Share via