சூட்கேஸில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொடூர கொலை

தெலங்கானா மாநிலம் நிஜாம்பேட்டை அருகே புதருக்குள் கிடந்த சூட்கேஸில், இளம்பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதி மக்கள் சூட்கேஸில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சூட்கேஸை திறந்தபோது அதில், 25 முதல் 30 வயதுடைய இளம்பெண்ணின் சடலம் இருந்தது தெரியவந்து. மேலும், கொடூரமா கொலை செய்யப்பட்டு, உடல் முற்றிலும் சிதைந்து இருந்ததும் தெரியவந்தது.
Tags :