தொகுதி தொடர்பாக இதுவரை எந்த பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை -பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

by Admin / 23-12-2025 07:53:52pm
 தொகுதி தொடர்பாக இதுவரை எந்த பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை -பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அமைச்சரும்பாஜக தமிழக பொறுப்பாளர்  பியூஸ் கோயல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் லீலா பேலஸில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.. இதில் அதிமுக சார்பாக துணை பொதுச் செயலாளர் கே .பி. முனுசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர் ,வேலுமணி, தங்கமணி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தொகுதி பங்கீடு இறுதியாக்கப்பட்டதாக தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன .இதற்கு பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூட்டம் முடிந்த பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் தொகுதி தொடர்பாக இதுவரை எந்த பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்றும் அதிமுகவுக்கு 170 தொகுதிகள் வரையும் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு குறிப்பிட்ட தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்துள்ளதாகவும் வெளியான தகவல்களை அவர் திட்டவட்டமாக மறுத்தார். தற்போதைய சந்திப்புகள் கள நிலவரம் குறித்து அமைந்ததாகவும் இன்னும் தேர்தல் கூட்டணிக்கான முறையான பேச்சுவார்த்தைகள் தொடங்கவில்லை என்றும் அவர் கூறினாா். திமுகவின் ஆட்சியைவீழ்த்துவதே தங்களின் முக்கிய நோக்கம் என்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே தங்களின் எதிர்பார்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்..

 

 

Tags :

Share via

More stories