சசிகலா, ஓபிஎஸ்சை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளும் திட்டம் இல்லை-எடப்பாடி அதிரடி

சேலம் மாவட்டம் ஓமலூர் அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 400 பேர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது என்றார். விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு என அனைத்து வகையிலும் மக்கள் அவதிபட்டு வரும் நிலையில், திமுக அரசின் பட்ஜெட் அறிவிப்புகள் வெறும் நாடகம் என்றார்.சசிகலா, ஓபிஎஸ்சை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளும் திட்டம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்றார்.
Tags : சசிகலா, ஓபிஎஸ்சை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளும் திட்டம் இல்லை-எடப்பாடி அதிரடி