கார்த்திகை சோமவாரம் எதனால் சிறப்பு வாய்ந்தது தெரியுமா?
சிவ பெருமானைக் குறித்து நோற்கப்படும் விரதங்களுள் சோமவார விரதம் முக்கியமானது சந்திரனுக்குரிய நாளான திங்கள் கிழமையில் இது கடைப்பிடிக்கப்படுகிறது ரோகத்தில் துன்புற்று அழியும் படி சபிக்கப்பட்ட சந்திரன் இந்த விரதத்தை கடைப்பிடித்து விமோசனம் பெற்று சிறப்பு பெற்றார்
கார்திகை மாத சோம வாரங்களில் சிவாலயங்களில் 'சங்காபிஷேகம்' நடைபெறும் 108 அல்லது 1008 சடங்குகளில் நீரைநிரப்பி யாக சாலைகளில் வைத்து ஸ்ரீ ருத்ர ஜெபம் செய்து அந்நீரால் சிவபெருமானுக்கும் திருமுழுக்காட்டுகின்றனர் கார்திகை சோமவார தினங்களில் இந்த வைபவத்தைத் தரிசிப்பதுடன் சிவாலயங்களில் அருளும் சந்திரசேகரமூர்த்திக்கு வெண் மலர்கள் சூட்டி வெண்பட்டு அணிவித்து வழிபட்டால் ஆயுள் விருத்தி அடைவதுடன் மன அமைதி கிட்டும் வம்சம் தழைக்கும்
திரு நாட்களில் சிவத்தலங்கள் தரிசிப்பது கோடி புண்ணியத்தை பெற்றுத்தரும் நாளை இந்த வருடத்தின் முதல் கார்த்திகை சோமவாரம்.
எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிவபெருமானின் அருளை பெறுங்கள்
Tags :