கன்னியாகுமரி கடல் பகுதியில் சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை.
நெல்லை,தூத்துக்குடி,கன்னியாகுமரி ஆகிய கடல்பகுதிகளில் கடலோரக்காவல்படை சார்பில் கண்காணிப்புபணிகள் நடைபெற்றுவருகின்றன.இந்நிலையில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 48 மீனவ கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அதிநவீன படகுளில் சென்று பாதுகாப்பு ஒத்திகை பணியில் ஈடுபட்டுள்ளனர்,இன்றும் நாளையும் நடைபெறும் கடல் பாதுகாப்பு பணியில்,கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் சாந்தி தலைமையில் இரண்டு குழுக்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags : கன்னியாகுமரி கடல் பகுதியில் சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை.



















