நூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி சிறப்பு வழிபாடு

திண்டுக்கல் மேட்டுப்பட்டி சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கார்த்திகை 1ஆம் தேதி மாலை அணிந்து சபரிமலை ஐயப்பனுக்கு விரதம் இருக்கத் தொடங்கியுள்ளனர். ஐயப்பன் மண்டபத்தில் உள்ள சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின் ரதத்தில் ஐயப்பன் அப்பகுதியில் முக்கிய வீதிகளில் பவானி வந்தார். பின்னர் பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தீ மிதித்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். குருசாமி கும்ப கலசங்களை ஏந்தி வந்து பூக்குழி குண்டத்தின் முன்பு வைத்து , தீ மிதிக்கும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் குண்டத்தில் மலர்களை தூவினார்கள். குருசாமிகள் தீ மிதித்தனர். அதை தொடர்ந்து பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தீ மிதித்தனர். இதில் பக்தர் ஒருவர் தனது மகனை தோளில் சுமந்தபடி தீமிதித்தார். இந்நிகழ்ச்சியை காண ஐயப்ப பக்தர்களின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பலர் திரண்டு இருந்து, தீ மிதித்து வரும் ஐயப்ப பக்தர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றுச் சென்றனர்.
Tags :