டிசம்பர் -31 வரை பழைய முறையில் மின்கட்டணம் கட்டலாம் -

by Admin / 28-11-2022 11:05:53am
டிசம்பர் -31 வரை பழைய முறையில் மின்கட்டணம் கட்டலாம் -


மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என்ற மின்சாரவாரியத்தின் உத்தரவால்,பல்வேறுகருத்துக்கள் சமூக வலைத் தளங்களில்  பகிரப்பட்டன்.பொதுமக்களுக்கும் இதுகுறித்து தெளிவான புரிதலுக்காக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் இதுகுறித்து விளக்கியதோடு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.அதில்,தமிழ்நாட்டில் உள்ள வீடு, கைத்தறி,விசைத்தறி,குடிசை மற்றும் விவசாய மின் இணைப்பு எண்ணை அவர்களது ஆதாருடன் இணைக்கும் பணியானது.மத்திய அரசின் உரிய ஒப்புதல் பெற்று தமிழகம் எங்கும் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.இதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஏற்கனலவ செயல்படுத்தி வருகிறது.பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்தும்போது ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்காகவும் பொதுமக்களின் நலனைக்கருத்தில் கொண்டும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமானது தமிழகத்தில் உள்ள அனைத்து2,811 பிரிவு அலுவலங்களிலும் திங்கள் கிழமை முதல் டிசம்பர் 31 ந்தேதி வரை
சிறப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளது.பண்டிகை தினங்கள். தவிர்த்து ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மாலை 5.15 வரை இந்த சிறப்பு முகாம் செயல்படும்.பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு சிறப்பு முகாம்கள் மூலம் தங்களது மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைத்துககொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.31.12.2022 வரை பொதுமக்கள் அனைவரும் தங்களது மின்கட்டணத்தை எவ்வித சிரமும் இன்றி,ஏற்கனவே உள்ள நடைமுறையின்படி செலுத்தலாம்.அதற்கு எவ்வித இடையூறும்இல்லை என்றும் ஆதார் இணைப்பதன் மூலம் பெயர் மாற்றம் செய்வது எளிதாகும் என்றும் இதன் மூலம் 100 யூனிட் இலவச மின்சாரம் பெறுவதில் எந்தவித தடையும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via