மக்களவை தேர்தல் தொகுதிப் பங்கீடு - மதிமுக குழு அமைப்பு

மக்களவை தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மதிமுக குழு அமைத்துள்ளது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக, பேச்சுவார்த்தை நடத்தும் வகையில், குழு அமைத்துள்ளது. அவைத்தலைவர் அர்ஜுன் ராஜ், பொருளாளர் செந்திலதிபன் உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். அரசியல் ஆய்வு மைய செயலாளர் ஆவடி அந்திரிதாஸ், தேர்தல் பணிச் செயலாளர் வி.சேஷன் ஆகியோரும் பேச்சுவார்த்தை குழுவில் உள்ளனர். இதனிடையே நேற்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தலைமையில் திமுக தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, திருச்சி சிவா, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
Tags :