தமிழக அரசுக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பைக் காண தமிழக அரசு தடைவிதித்துள்ளது. மேலும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், ராமர் பெயரில் பூஜை, பஜனை, பிரசாதம், அன்னதானம் வழங்க அனுமதி இல்லை எனவும் போலீசார் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்துள்ளனர் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மேலும் அரசின், ஹிந்து விரோத போக்கை கடுமையாக கண்டிக்கிறேன் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து பேசிய தமிழக இந்தி அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இந்த தகவல் முற்றிலும் வதந்தி, தமிழக அரசுக்கு கெட்ட பெயர் உண்டாக்குவதற்கே இவ்வாறு பொய்கள் பரப்பப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.
Tags :