மரக்கிளையை வெட்டினால் 6 மாதம் சிறை தண்டனை- சீமான்.

நான் ஆட்சிக்கு வந்தால் பள்ளி மாணவனொருவன் பத்து மரங்கள் நட்டால் அவனுக்கு தேர்வில் 10 மதிப்பெண்கள் வழங்குவேன் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மரங்களின் மாநாட்டில் உரையாற்றிய சீமான், "மரக்கிளையை வெட்டினால்கூட, அது சக மனிதனின் கையை வெட்டுவதற்கு சமம் என்பதால், அக்குற்றத்திற்கு 6 மாதம் சிறை தண்டனை கொடுப்பேன். சொந்த வீடாகவே இருந்தாலும் அங்குள்ள மரத்தை வெட்டவேண்டுமென்றால், என்னை கேட்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
Tags : மரக்கிளையை வெட்டினால் 6 மாதம் சிறை தண்டனை- சீமான்.