முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் மாமல்லன் நீர் தேக்கத் திட்டம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினார்.
தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் இன்று செங்கல்பட்டு நெம்மேலியில் ரூபாய் 342.60 கோடி மதிப்பீட்டில் மாமல்லன் நீர் தேக்கத் திட்டம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினார். மழைக்காலங்களில் வீணாகும் உபரி நீரை சேமிக்கவும் கடல் நீர் உட்பகுவதை தடுப்பதற்கும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் கடற்கரைச் சாலை பக்கிங் காம் கால்வாயில் குறுக்கே இந்த நீர் தேக்கம் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் 460 மில்லியன் கன அடி தண்ணீர் சேமிக்க முடியும் என்றும் 13 லட்சம் மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1.65 டிஎம்சி கொள்ளளவு கொண்ட நீர் தேக்கமாக இது அமைகிறது. தமிழக முதலமைச்சர் தம் உரையின்போது, திமுக ஆட்சியில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் அதை மற்ற கட்சியினர் எதுவும் செய்யவில்லை என்பது போல் சொல்வதாகவும் குறிப்பிட்டதோடு என்னென்ன அணைகள் என்கிற பட்டியலையும் சொன்னார். உப்பாரு, சிற்றாறு ,சோலை ஆறு, சோத்துப்பாறை ஆறு,பச்சையாறு சாஸ்தா கோவில் ஆறு, நம்பியாறு , பொன்னை ஆறு என 63 அணைகள் 1967 லிருந்து 2011 வரை திமுக ஆட்சியில் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்ததோடு 69 ஏரிகளில் இருந்து வரும் உபரி நீர் கடலில் கலக்காமல் இந்த நீர் தேக்கத்தில் சேகரிக்கப்படும் என்பதோடு 459 கோடி ரூபாயில் தூர் வாரும் பணிகள் நடந்து வருவதாகவும் 121 புதிய தடுப்பணை பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
Tags :


















