கர்நாடகா முதலமைச்சராக யார் பதவி ஏற்பர் ?

by Admin / 17-05-2023 01:12:48pm
கர்நாடகா முதலமைச்சராக யார் பதவி ஏற்பர் ?

கர்நாடகா முதலமைச்சராக யார் பதவி ஏற்பர் .கடந்த இரண்டு மூன்று நாட்களாக கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவிற்கு  பிறகு யாரை முதல்வர் ஆக்குவது என்பது குறித்து  காங்கிரஸ் கட்சியினுடைய மேலிடம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்நிலையில், முன்னாள் முதல்வர் சீத்த ராமையா, டி கே சிவகுமார் இருவருக்கு இ டையே கடும் போட்டி நிலவைக் கொண்டிருக்கிறது. முன்னாள் முதல்வர் சீத்த ராமையா தனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். அதேபோன்று கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி கே சிவகுமார் தன்னுடைய 61 வது பிறந்தநாள் பரிசாக கர்நாடக முதலமைச்சர்  பதவி கிடைக்க வேண்டும் என்பதிலும் தீவிரமாக உள்ளார். கடும் நெருக்கடிக்கு இடையில் காங்கிரஸ் கட்சியை வழிநடத்திச் செல்லும் டி கே சிவகுமாருக்கு இந்த முறை முதலமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என்று அவருடைய ஆதரவாளர்கள் கோரி வருகிறார்கள். அதனுடனே, அவரது தம்பி தேசிய காங்கிரஸ் கட்சியினுடைய தலைவரை சந்தித்து பேசியதும் தலைமை அழைத்ததின்  காரணமாக நேற்று  டி கே சிவகுமார் டெல்லி சென்றதும் மூன்று நாட்களாக டெல்லியில் முகாம் வீட்டிற்கும்  சீத ராமையாவும் அவரது ஆதரவாளர்களும் தங்கள்  தலைவருக்கே முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்கிற ஆர்வத்தோடு அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள். வரும் 2024க்கு பாராளுமன்ற பொது தேர்தல் வருகிற நிலையில் யாரை முதலமைச்சராக ஆக்கினால் கர்நாடகத்தில் அதிக அளவு பாராளுமன்ற உறுப்பினரை பெற முடியும் என்கிற கணக்கிலும் காங்கிரஸ்  கட்சி  தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன .ஆக ,இன்று மாலைக்குள் கர்நாடக முதலமைச்சரை அறிவிக்க உள்ளது காங்கிரஸ் தலைமையிடம்.

 

Tags :

Share via
Logo