வேளாங்கண்ணி - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலும் மக்களின் பயன்களும்

by Editor / 05-06-2022 10:12:30pm
வேளாங்கண்ணி - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலும் மக்களின் பயன்களும்

வேளாங்கண்ணி - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலும் மக்களின் பயன்களும் 

(அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் )

வேளாங்கண்ணி 18.30 (மாலை 6.30)
திருவாரூர் 20.30
அதிராம்பட்டினம் 21.40 (இரவு 9.40) 
பட்டுக்கோட்டை 21.57
காரைக்குடி 23.25
விருதுநகர் 02.00
செங்கோட்டை 04.20 (அதிகாலை)
கொல்லம் 8.30 (காலை)
கோட்டயம் 10.33
எர்ணாக்குளம் 12.00 (நண்பகல்)
(அனைத்து திங்கட்கிழமைகளிலும் சேரும்)

இந்த ரயில் மூலம் எளிதில் செல்லக்கூடிய முக்கிய இடங்கள்: 

1. குற்றாலம் :

குற்றாலம் சொல்வோர் செங்கோட்டை ரயில் நிலையத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள். ரயில் நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவில் குற்றாலம் உள்ளது.  

2. கொச்சி விமான நிலையம் : 

கொச்சி விமான நிலையம் செல்வோர் (ஹஜ் செல்வோர், கொச்சி வழியாக அரபு நாடு செல்வோர்) எர்ணாக்குளம் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து மெட்ரோ  ரயிலில் ஆலுவா மெட்ரோ நிலையம் சென்று அங்கிருந்து விமான நிலையம் செல்லலாம்.  அல்லது எர்ணாக்குளம் ரயில்நிலையத்திலிருந்து விமான நிலையத்திற்கு நேரடி பேருந்து வசதிகளும் உள்ளது.  

3. திருவனந்தபுரம் விமான நிலையம்

திருவனந்தபுரம் விமான நிலையம் செல்வோர் கொல்லம் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து ஒரு மணி நேரத்தில் பாசஞ்சர் ரயிலில் அல்லது பேருந்தில் திருவனந்தபுரம் விமான நிலையம் செல்லலாம். 

4. தென்மாவட்டங்கள் :

மேலும் தென்மாவட்டங்கள் செல்வார் விருதுநகரில் இறங்கி திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் அல்லது பெங்களூர் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்ஸை பயன்படுத்தி திருநெல்வேலி, நாகர்காவில் செல்லலாம். மேலும் இந்த ரயிலை பயன்படுத்தி சபரிமலைக்கு எளிதாக சென்று விடலாம்.

5. முக்கிய சுற்றுலா இடங்கள் : 

தென்மலை சுற்றுலா செல்வோர் தென்மலை ரயில் நிலையத்தில் இறங்கி கொள்ளலாம். கொல்லம் படகுசவாரி, வர்க்கலா கடற்கரை, எடவா, ஜடாயு பாறை கற்றுலா செல்வோர் கொல்லம் ரயில் நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.  குமாரகம்  படகு சவாரி செல்வோர், வாகமான் மலை பிரதேசம் செல்வார், மூணார் மலை பிரதேசம் செல்வார் கோட்டயம் ரயில் நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி சுற்றுலா செல்வோர் எர்ணாகுளம் ரயில் நிலையத்தை பயன்படுத்தி கொள்ளலாம். 

 

Tags : Velankanni - Ernakulam Express train and the benefits to the people

Share via

More stories

Logo