தேனி:கொலை வழக்கில் இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு.

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள கானா. விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் போஸ் என்ற போஜராசனுக்கும் (வயது47) .
அதே ஊரைச் சேர்ந்த குமார் (வயது 32) என்பவருக்கும் பூர்வீக சொத்தில் நிலத்தகராரு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு போஜ ராஜன் அவரது தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது குமார் இரும்பு சுத்தியலால் தலை மற்றும் உடம்பில் தாக்கியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த போஜராஜன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த பொழுது சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து கானா.விளக்கு காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை முடிவுற்று குமார் என்ற இளைஞர் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாத கால சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சொர்ணம் ஜே.நடராஜன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.மேலும் இந்த தீர்ப்பினை தொடர்ந்து குற்றவாளியை சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர் .
Tags : தேனி மாவட்ட நீதிமன்றம்