வீட்டில் தூக்கிக்கொண்டியிருந்த நபர் தெருநாய்கள் கடித்ததில் உயிரிழப்பு.

தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பேரூராட்சி பகுதியில் இரவு மற்றும் பகல் நேரங்களில் சாலைகளில் அதிக அளவில் சுற்றி திரிவதோடு மட்டும் இல்லாமல் வீட்டில் வளர்க்கும் கால்நடைகளை கடிப்பதும் சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சுறுத்துவதும் தொடர்கதையாக உள்ளது.இந்நிலையில் சாம்பவர்வடகரை பேரூராட்சி பகுதியில் வசித்து வரும் மாரியப்பன் (50) என்பவர் கடந்த 25 தினங்களுக்கு முன்பு இரவில் வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்த நிலையில் சாலையில் சுற்றி திரிந்த தெருநாய்கள் இவரை கடித்துள்ளதாக கூறப்படுகிறது.இதில் படுகாயமடைந்த அவர் வீட்டிலே சிகிச்சை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.இதனை அடுத்து உறவினர்கள் இவரை தென்காசியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று சாம்பவர் வடகரைப் பகுதிகளில் பேரூராட்சி நிர்வாகம் அதிரடியாக சாலையை சுற்றித்திரியும் நாய்களை பேரூராட்சி பணியாளர்களை கொண்டு பிடிக்கும் பணியை தொடங்கியுள்ளது.
Tags : வீட்டில் தூக்கிக்கொண்டியிருந்த நபர் தெருநாய்கள் கடித்ததில் உயிரிழப்பு