முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட விவகாரம்; ஏபிவிபி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

by Staff / 15-09-2022 02:16:42pm
முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட விவகாரம்; ஏபிவிபி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டதற்காக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஏ.பி.வி.பி. அமைப்பினர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தவிட்டுள்ளது.

தஞ்சாவூர் அருகே, மைக்கேல்பட்டி துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த, அரியலூரை சேர்ந்த 17 வயது மாணவி, பூச்சிக்கொல்லி மருந்து குடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக உயிரை மாய்த்து கொண்டார்.

தஞ்சை மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், மேலும் மரணங்கள் நிகழக் கூடாது என்பதை வலியுறுத்தியும், தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக ஜாமீனில் வெளிவந்ததை கண்டித்தும் ஏபிவிபி அமைப்பினர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஏ.பி.வி.பி. அமைப்பை சேர்ந்த் 35க்கும் மேற்பட்டோர் மீது சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இந்திய தண்டனை சட்டத்தின் சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், கலகம் செய்ய தூண்டிவிடுதல், இரு பிரிவினரிடையே விரோதத்தை தூண்டுதல் ஆகிய பிரிவுகள் மற்றும் பொது சொத்து சேதப்படுத்துதல் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் தஞ்சை மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏபிவிபி அமைப்பினர் மனு அளித்தனர்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், கௌசிக், உகேந்திரன், சுசீலா, அமர் வஞ்சிதா உள்ளிட்ட 31 பேர் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் இதுபோன்ற போராட்டங்களை ஊக்குவிக்க முடியாது எனவும் நீதிபதி இளந்திரையன் கூறினார்.

 

Tags :

Share via