வீர வாஞ்சிநாதனின் 138 வதுபிறந்த தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

by Editor / 17-07-2024 11:08:17am
வீர வாஞ்சிநாதனின் 138 வதுபிறந்த தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியைச் சார்ந்தவர் வீரவாஞ்சிநாதன் ஆங்கிலே ஆட்சித் தலைவர் ஆசிரையை சுட்டுக் கொண்டு தாழும் அடைந்தவர் இவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றும் வண்ணமாக தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள முத்துசாமி பூங்கா வளாகத்தில் உள்ள வீர வாஞ்சிநாதன் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது இந்த மணிமண்டபத்தில் வீர வாஞ்சிநாதன் அரை திருவுருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது இன்று அவரது 138 வது பிறந்த தினத்தை முன்னிட்டு காலை 10 மணி அளவில்  தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் வீர வாஞ்சிநாதன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இதன் தொடர்ச்சியாக அவரது குடும்பத்தினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் முன்னால் நகர் மன்ற தலைவர் ரஹீம் உள்ளிட்ட பிரமுகர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இதன் தொடர்ச்சியாக கொல்லும் சாலையில் உள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு நகர திமுக ,அதிமுக சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

 

Tags : வீர வாஞ்சிநாதனின் 138 வதுபிறந்த தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Share via